கத்தாரில் அதிகரிக்கும் கொரோனா: இன்று (பிப்.14) புதிதாக 440 பேர் பாதிப்பு..!

Corona update Qatar nov14
Pic: The Peninsula Qatar

கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட 440 புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் குணமடைந்த 177 நோயாளிகள் ஆகியவற்றை பொது சுகாதார அமைச்சகம் ‌இன்று (14-02-2021) பதிவு செய்துள்ளது.

இதுவரை கத்தாரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 157,244ஆக உள்ளது.

FIFA Club World Cup விருது வழங்கும் நிகழ்ச்சி: பெண் நடுவர்களுடன் கைகுலுக்க மறுத்த கத்தார் இளவரசர்.!

கத்தாரில் இன்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸிலிருந்து மேலும் 177 நோயாளிகள்  குணமடைந்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது வரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,48,314ஆக உள்ளது.

பொது சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில், 10,402 பேருக்கு ஆய்வக சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது. மேலும், கத்தாரில் இதுவரை மொத்தம் 1,465,229 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.

கத்தார் வரும் பயணிகளின் கவனத்திற்கு: இனி தனிமைப்படுத்தல் கட்டாயம்.!