கொரோனா விதிமீறல்: கத்தாரில் இந்த வாரத்தில் 1000 பேருக்கு மேல் நடவடிக்கை.!

Violating Covid-19 precautionary measures
Pic: Abdula Basit/ Peninsula Qatar

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கத்தாரில் இன்று (18-11-2020) முகக்கவசம் அணிய தவறிய 146 பேரை உள்துறை அமைச்சகம் (MoI) பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பியுள்ளது.

கத்தாரில் புதிய Souq Al Haraj சந்தை விரைவில் துவக்கம்.!

ஒரு வாகனத்தில் டிரைவர் உட்பட நான்கு பேருக்கு மேல் செல்ல அனுமதியில்லை என்று உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவை மீறி செயல்பட்ட காரணத்தால் பத்து பேர் மீது அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது வரை முகக்கவசம் அணிய தவறிய 964 பேர் மற்றும் வாகனத்தில் நான்கு பேருக்கு மேல் சென்றதற்காக 48 பேர்களையும் அமைச்சகம் பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பியுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு  அதிகாரிகள் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கத்தாரில் கட்டாய இடங்களில் முகக்கவசம் அணிய தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும்; MOI

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Related posts

கத்தாரில் அரசு துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் சம்பளம் குறைப்பு.!

Editor

கொரோனா அப்டேட் (மே 15): கத்தாரில் புதிதாக 1,153 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு.!

Editor

கத்தாரில் சுமார் 10 மில்லியனைத் திருடிய இணைய மோசடி கும்பல் கைது..!

Editor