கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட கத்தார் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர்.!

COVID-19 vaccine Qatar
Pic: @jo3an

கத்தார் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவரான H E Sheikh Joaan bin Hamad Al Thani அவர்கள் இன்று (10-01-2021) COVID-19 தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் Sheikh Joaan bin Hamad Al Thani அவர்கள் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

சவுதிக்குள் நுழைந்த கத்தார் வாகனங்கள்: ரோஜாக்களுடன் வரவேற்ற அதிகாரிகள்.‌!

COVID-19 தடுப்பூசியின் முதல் டோஸ் மருந்தை போட்டுக்கொண்டேன் என்றும், சுகாதார அமைச்சகத்திற்கும் மற்றும் வெள்ளை இராணுவத்திற்கும் (White Army) நன்றி என்றும், அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கும் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை நாங்கள் விரும்புகிறோம் என அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

கத்தாரில் Pfizer மற்றும் BioNTech தடுப்பூசியானது, 65 வயதுடைய பெரியவர்கள், முன்னணி தொழிலாளர்கள் மற்றும் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 சுகாதார மையங்களில் வழங்கப்பட்டு வருகிறது.

கத்தாரில் களைகட்டும் அறுவடை திருவிழா; புதிய இடத்திலும் தொடக்கம்..!

மேலும், அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா உருவாக்கிய COVID-19 தடுப்பூசியை கத்தார் பெறுவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளது என பொது சுகாதார அமைச்சகத்தின் (MoPH) தடுப்பூசி பிரிவு, சுகாதார பாதுகாப்பு மற்றும் தொற்று நோய் கட்டுப்பாட்டுத் துறைத் தலைவரான Dr. Soha Al Bayat அவர்கள் இன்ஸ்டாகிராம் நேரலையில் முன்னதாக கூறியுள்ளார்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…