கத்தார் நாட்டிற்கு நாளை வந்தடையும் COVID-19 தடுப்பூசி.!

Covid-19 vaccine shipment

காத்தார் நாட்டிற்கு COVID-19 தடுப்பூசியின் முதல் தொகுதி நாளை (21-12-2020) வந்தடையும் என கத்தார் பிரதமர் தெரிவித்துள்ளார்.

கத்தார் பிரதமரும், உள்துறை அமைச்சருமான HE ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஸிஸ் அல் தானி அவர்கள் COVID-19 தடுப்பூசியின் முதல் தொகுதி டிசம்பர் 21ஆம் தேதி கத்தார் வந்தடையும் ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.

கத்தார் 2022 உலகக் கோப்பை ஏற்பாடுகள் தீவிரம்; FIFA தலைவர் பாராட்டு.!

கத்தார் அமீரின் உத்தரவின்படி, COVID-19 தடுப்பூசியின் முதல் ஏற்றுமதி நாளை கத்தார் வந்தடையும் என்றும், சுகாதார நெறிமுறைகளின்படி தடுப்பூசி அனைவருக்கும் வழங்குமாறு சுகாதாரத் துறைக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

கத்தார் விளையாட்டு மற்றும் அவசர விவகாரங்களுக்கான பொது சுகாதார அமைச்சரின் ஆலோசகர் Dr. Abdul-Wahab Al-Musleh அவர்கள் முதியவர்கள், நாள்பட்ட நோய் உள்ளவர்கள் மற்றும் முன்னணி தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று முன்னதாக தெரிவித்தார்.

மேலும், அடுத்த மாதங்களில் படிப்படியாக தடுப்பூசி மற்ற பொதுமக்களுக்கு சென்றடையும் என அவர் தெரிவித்தார்.

கத்தார் ஹமாத் விமான நிலையத்தில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பறிமுதல்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…