கத்தாரில் கோவிட்-19 இரண்டாம் அலை வருமா..? MoPH விளக்கம்.!

Covid19 Second Wave
Pic: Twitter/WISH Qatar

கத்தார் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் அறிகுறிகள் எதுவும் இல்லை என்று பொது சுகாதார அமைச்சர் H E Dr. ஹனன் முகமது அல் குவாரி (Hanan Mohamed Al Kuwari) அவர்கள் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் அலையின் அறிகுறி எதுவும் இல்லை என்றாலும் கவனமாக இருப்பது மிகவும் அவசியம் அவர் கூறியுள்ளார்.

கத்தாரில் COVID-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறிய 130 பேர் மீது நடவடிக்கை.!

கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட இறப்பு விகிதம் 0.15% உலகின் மிகக் குறைந்த ஒன்றாகும் என்றார்.

தொற்றுநோய் தொடக்கத்திலிருந்து எங்கள் ICU-களில் கடுமையான கோவிட்-19 நோயாளிகளுக்கு நாங்கள் சிகிச்சை அளித்துள்ளோம், அவர்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், இரண்டாம் அலையின் அறிகுறி இல்லாவிட்டாலும் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று பொது சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கத்தார் Al Muraikh-ல் உள்ள இந்த தெரு ஒரு வருட காலத்திற்கு மூடல்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…