கத்தார் ஹமாத் விமான நிலையத்தில் போதை பொருளுடன் ஒருவர் கைது.!

Customs arrests Passanger illegal drugs
Pic: Qatar Customs

ஆசியாவின் சில பகுதிகளில் நடைமுறையில் உள்ள (Shabu) என்ற சட்டவிரோத போதைப்பொருளை கடத்த முயன்ற பயணி ஒருவரை கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த தடைசெய்யப்பட்ட போதை பொருள், பயணியின் ஆடைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தாகவும், பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளின் எடை 14 கிராம் என்றும் கத்தார் சுங்கம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமான பொருட்களை நாட்டிற்கு கொண்டு செல்வதற்கு எதிராக அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், சுங்க அதிகாரிகள் சமீபத்திய சாதனங்களைக் கொண்டு செயல்படுகிறார் என்றும், கடத்தல்களை சமாளிக்க அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…