கத்தார் ருவாஸ் துறைமுகத்தில் கஞ்சா பொட்டலங்கள் கடத்த முயற்சி; சுங்க அதிகாரிகள் முறியடிப்பு.!

Customs foils attempt to smuggle hashish at Ruwais Port
Customs foils attempt to smuggle hashish at Ruwais Port. Pic: Qatar Customs

கத்தார் ருவாஸ் துறைமுகத்தில் (Ruwais Port) பெரிய அளவிலான கஞ்சா பொட்டலங்களை கடத்தும் முயற்சியை சுங்க அதிகாரிகள் முறியடித்தனர்.

தடைசெய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை குளிரூட்டப்பட்ட டிரக் ஒன்றின், உதிரி டயருக்கு மறைத்து கடத்த முயன்றபோது, அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கத்தாரில் போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேர் கைது..!

கத்தாருக்குள் கடத்த முயன்ற இந்த கஞ்சா பொட்டலங்களின் மொத்த எடை 45.5 கிலோ என கத்தார் சுங்கத்துறை ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

மேலும், சுங்க அதிகாரிகள் சமீபத்திய சாதனங்களைக் கொண்டு செயல்படுகிறார்கள் என்றும், கடத்தல்களை சமாளிக்க அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஹமாத் துறைமுகத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை (tobacco) சர்க்கரை மூட்டைக்குள் மறைத்து கடத்த முயன்றபோது, பொது சுங்க ஆணைய (GAC) அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தோஹா மெட்ரோ நிலையங்களுக்கு அருகில் 300 பேருந்து நிறுத்தங்கள் தயாரிக்கும் பணி..!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook

Twitter

Instagram

Telegram