கத்தார் ஹமாத் துறைமுகத்தில் 7,493 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.!

Customs seized tambaku smuggling
Pic: TPQ

கத்தாரில் உள்ள ஹமாத் துறைமுகத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தும் முயற்சியை பொது சுங்க ஆணைய அதிகாரிகள் முறியடித்தனர்.

இதுகுறித்து பொது சுங்க ஆணையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தார் கலவைக்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் ஏற்றுமதிக்குள் மறைத்து கடத்த முயன்ற 7,493 கிலோ புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

கத்தாரில் தொழிலாளர்களுக்கு ஆட்சேர்ப்பு ஒப்புதல் வழங்கும் பணி தொடக்கம்.!

சட்டவிரோதமான பொருட்களை நாட்டிற்கு கொண்டு செல்வதற்கு எதிராக அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், சுங்க அதிகாரிகள் சமீபத்திய சாதனங்களைக் கொண்டு செயல்படுகிறார் என்றும், கடத்தல்களை சமாளிக்க அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் அல் ஷாஹானியா பூங்காவில் பறவைகளுக்கு நீர் தொட்டிகள் அமைப்பு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…