கத்தார் ஹமாத் விமான நிலையத்தில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பறிமுதல்.!

Customs seizes narcotic pills
Pic: @Qatar customs

கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில், போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கடத்தும் முயற்சியை பொது சுங்க ஆணையம் முறியடித்தது.

இதுகுறித்து கத்தார் சுங்கம் அதிகாரப்பூர்வ ட்விட்டரில், கத்தார் நாட்டிற்குள் கடத்த முயன்ற
166 போதை மாத்திரைகள் மற்றும் 6.95 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக சுங்கம் தெரிவித்துள்ளது.

கத்தார் தேசிய தினம்: FIFA தலைவருடன் ‌கத்தார் அமீர் சந்திப்பு.!

பயணியின் சோதனையின்போது, இந்த தடைசெய்யப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்கம் கூறியுள்ளது.

சட்டவிரோதமான பொருட்களை நாட்டிற்கு கொண்டு செல்வதற்கு எதிராக அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், சுங்க அதிகாரிகள் சமீபத்திய சாதனங்களைக் கொண்டு செயல்படுகிறார் என்றும், கடத்தல்களை சமாளிக்க அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் திருமண நிகழ்ச்சியில் அதிக நபர்கள் பங்கேற்க அனுமதி.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…