கத்தாரில் பெரும்பாலான பகுதிகளில் மோசமான வானிலை.!

decrease horizontal visibility
Pic: Ram Chand/Gulf Times

கத்தாரில் பெரும்பாலான பகுதிகளில் இன்று (21-01-2021) காலை ஏற்பட்ட தூசி காற்று காரணமாக கிடைமட்டத் தெரிவுநிலை குறைந்து வருவதைக் கத்தார் வானிலை ஆய்வுத்துறை கண்டறிந்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிராந்தியங்களில் கிடைமட்டத் தெரிவுநிலை குறைந்து வருவதை நாங்கள் கவனித்து வருகிறோம், தற்போது தலைநகரான தோஹாவில் 2 கி.மீ தெரிவுநிலை காணப்படுவதாக கத்தார் வானிலை ஆய்வுத்துறை ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

கத்தாரில் இன்று இரவு முதல் பலத்த காற்று வீசக்கூடும்; வானிலை ஆய்வுத்துறை.!

இந்த வானிலை நிலைமையில் அனைவரும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

முன்னதாக, கத்தார் வானிலை ஆய்வுத்துறை நேற்றிரவு இரவு முதல் வெள்ளிக்கிழமை வரை பலத்த காற்று வீசும் என்று கணித்திருந்தது.

முன்னறிவிக்கப்பட்ட வானிலை நிலைமை காரணமாக இந்த காலகட்டத்தில் அனைத்து கடல் நடவடிக்கைகளையும் தவிர்க்குமாறு குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை கத்தார் வானிலை ஆய்வுத்துறை வலியுறுத்தியுள்ளது. கத்தாரில் கடல் எச்சரிக்கை வருகின்ற சனிக்கிழமை முதல் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கத்தாரில் நிலவும் பனிமூட்டம்: வாகன ஓட்டிகளுக்கு QMD அறிவுறுத்தல்.!