தோஹா மெட்ரோ The Pearl-Qatar பகுதியை இணைக்கும் புதிய மெட்ரோலிங்க் சேவை அறிமுகம்.! 

Doha Metro introduces new metrolink connecting The Pearl-Qatar
Pic: Doha Metro

தோஹா மெட்ரோ புதிய இலவச மெட்ரோலிங்க் சேவையை அதன் ரெட் லைனில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சேவையானது, Pearl-Qatar பகுதியில் இருந்து Legtaifiya நிலையத்தை இணைக்கிறது.

Legtaifiya நிலையம் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி அன்று திறக்கப்பட்டது. இந்த நிலையம், Katara மற்றும் கத்தார் பல்கலைக்கழக நிலையங்களுக்கு இடையில் வந்து, Pearl-Qatar அருகில் உள்ளது.

இதையும் படிங்க: தோஹா மெட்ரோ நிலையங்களுக்கு அருகில் 300 பேருந்து நிறுத்தங்கள் தயாரிக்கும் பணி..!

இதுகுறித்து தோஹா மெட்ரோ ட்வீட்டில், எங்கள் இலவச மெட்ரோலிங்க் சேவைகளின் சேவை விரிவாக்கத்தை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது உங்களை Pearl-Qatar மற்றும் legtaifiya நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் என்று தெரிவித்துள்ளது.

புதிய மெட்ரோலிங்க் M110-க்கான செயல்பாட்டு நேரம்:

  • சனி – புதன்: 06:00 – 23:00
  • வியாழன்: 6:00 – 23:59
  • வெள்ளி: 14:00 – 23:59

இதையும் படிங்க: தோஹா மெட்ரோ பயணிகளுக்கு இலவச WiFi வசதி அறிமுகம்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…