இனி இந்த டிக்கெட் செல்லாது – தோஹா மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.!

Doha Metro suspends papertickets
Pic: Doha Metro

தோஹா மெட்ரோ நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக காகித டிக்கெட்டுகளை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து தோஹா மெட்ரோ அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், காகித டிக்கெட்டுகளின் பயன்பாட்டை நாங்கள் நிறுத்தி வைத்துள்ளோம், அவற்றை மீண்டும் பயன்படுத்தக்கூடிய பயண அட்டைகளாக (Travel Cards) மாற்றியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளது.

கத்தார் பெட்ரோலியம் நவம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலைகள் அறிவிப்பு.!

தோஹா மெட்ரோவில் பயணிக்க விரும்பும் பயணிகள் உங்களது நிலையான பயண அட்டையை (Travel Cards) வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், எங்களின் உரிமம் பெற்ற சில்லறை விற்பனையாளர்களிடமிருந்தோ அல்லது நிலையத்தில் உள்ள டிக்கெட் வழங்கும் இயந்திரத்திலிருந்தோ இந்த பயண அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என‌ தோஹா மெட்ரோ குறிப்பிட்டுள்ளது.

கத்தார் Al Farkiah கடற்கரைக்கு வாரம் இருமுறை இவர்கள் மட்டும் செல்ல அனுமதி.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…