கத்தாரில் இந்த வார இறுதியில் வெப்பநிலை குறையும்; வானிலை ஆய்வுத்துறை.!

Drop temperature during weekend
Pic: Qatar Weather

கத்தார் வானிலை ஆய்வுத்துறை வார இறுதியில் அதன் வானிலை அறிக்கையில், முதலில் மங்கலான வானிலை நிலவரத்தை முன்னறிவித்துள்ளது.

அதைத்தொடர்ந்து, பகல் நேரங்களில் சில மேகங்களுடன் மிதமான வெப்பநிலை இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.

மேலும், மாலை வரை வலுவான காற்றுடன் உயர் கடல் மட்டம் குறித்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு வானிலை ஆய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கத்தார் அமீர், பங்களாதேஷ் பிரதமருக்கு எழுத்துப்பூர்வ செய்தி அனுப்பினார்.!

அடுத்த இரண்டு நாட்களுக்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலை முறையே 22 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் நாளை (20-11-2020) வெள்ளிக்கிழமை காற்று கிழக்கு திசையை நோக்கி 5 முதல் 15 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை மறுநாள் சனிக்கிழமையன்று, காற்று தென்கிழக்கு திசையை நோக்கி 5 முதல் 15 கிலோமீட்டர் வேகத்தில் கரைக்கு அருகில் வீசும் என்றும், இது கடலோரங்களில் சில நேரத்தில் 18 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் நாட்டிற்குள் கடத்த முயன்ற 1,400 தடைசெய்யப்பட்ட மாத்திரைகள் பறிமுதல்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…