கத்தார், எகிப்து இடையே நேரடி‌ விமானங்களை இயக்க முடிவு.!

Egypt Qatar direct flights
Pic: REUTERS

கத்தாரிலிருந்து வரும் விமானங்களுக்கான வான் வழி எல்லையை எகிப்து நாடு நேற்று (12-01-2021) முதல் மீண்டும் திறந்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான விமான சேவைகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படும் என விமான வட்டாரங்கள் மற்றும் மாநில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கத்தார் – சவுதி எல்லை திறந்த மூன்றே நாளில் இத்தனை வாகனங்கள்…அடேங்கப்பா.!

கத்தார் தலைநகர் தோஹாவுக்கு எகிப்து ஏர் (EgyptAir) தினசரி விமானத்தை இயக்க திட்டமிட்டுள்ளது என எகிப்து விமான அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கத்தார் விமானங்களை வருகின்ற (18-01-2021) திங்கட்கிழமை முதல் மீண்டும் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் எகிப்தின் தலைநகர் கெய்ரோவிலிருந்து தோஹாவுக்கு தினசரி விமானங்களும் மற்றும் அலெக்ஸாண்ட்ரியாவிலிருந்து தோஹாவுக்கு வாரத்திற்கு நான்கு விமானங்கள் இயக்கப்படும் என எகிப்து ஏர் தலைவர் உள்ளூர் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.

தோஹாவில் உள்ள இந்த பகுதி மூடப்படுவதாக பொதுப்பணி ஆணையம் அறிவிப்பு.!

கத்தார் ஏர்வேஸ் தோஹாவுக்கும் எகிப்துக்கும் இடையிலான விமானங்களை வெள்ளிக்கிழமை மறுதொடக்கம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த ஒப்புதல் நிலுவையில் உள்ளது என Cairo விமான நிலைய ஆதாரங்களை ராய்ட்டர்ஸ் மேற்கோளிட்டுள்ளது.

த்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…