கத்தார், எகிப்து இடையேயான வான்வெளி எல்லை மூன்று ஆண்டுக்கு பின் திறப்பு.!

Egypt reopens Qatar airspace
Pic: REUTERS

கத்தாரிலிருந்து வரும் விமானங்களுக்கான வான் வழி எல்லையை எகிப்து நாடு இன்று (12-01-2021) முதல் மீண்டும் திறந்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான விமானங்களை மீண்டும் தொடங்க அனுமதிக்கும் என விமான வட்டாரங்கள் மற்றும் மாநில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மூன்று ஆண்டுக்கு பின் சவுதி ஏர்லைன்ஸ் முதல் விமானம் கத்தாரில் தரையிறங்கியது.!

கத்தார் உடனான உறவை மீட்டெடுப்பதற்காக கடந்த வாரம் அல் உலா ஒப்பந்தத்தில் வளைகுடா தலைவர்கள் கையெழுத்திட்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எகிப்து நாடு கத்தார் விமானங்களின் தடையை நீக்கி வான் வழியைக் கடக்க அனுமதித்துள்ளது என்றும், இரு நாடுகளின் தேசிய விமான நிறுவனங்கள் விமான இயக்க அட்டவணைகளை சமர்ப்பிக்க அனுமதித்துள்ளது என அல் அஹ்ரம் மாநில செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியா விமான விபத்து: கத்தார் அமீர் உள்ளிட்டோர் இரங்கல்.!

மேலும், மூன்று ஆண்டுகள் நீடித்த கத்தார் மீதான வான் வழி தடையை நீக்க எகிப்து தனது NOTAM-களை அதிகாரப்பூர்வமாக புதுப்பித்துள்ளது என விமான ஆய்வாளர் Alex Macheras அவர்கள் ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையில் செயல்படுத்தப்படும் ஒப்பந்தங்களில் சரக்குப் போக்குவரத்தை அனுமதிக்கும் என சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் மற்றும் விமான அமைச்சகத்தின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

த்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…