கத்தார் COVID-19 ஐ எதிர்த்து போராட ‘Ehteraz’ App-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.!

Ehteraz app launched to fight Covid-19.

கத்தார் COVID-19 நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையாக ‘Ehteraz’ என்ற பிரத்யேக அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த அப்ளிகேஷன், நோய் பரவும் சங்கிலித் தொடரைக் கண்காணிக்க உதவும் என்றும், மேலும், COVID-19 நோயால் பாதிக்கப்படுவதைப் பற்றி எச்சரிப்பது மற்றும் சந்தேகத்திற்குரிய COVID-19 நோயாளிகளை உடனடியாக கண்டறிய மருத்துவ குழுக்களுக்கு உதவுவது உள்ளிட்ட பல நோக்கங்களுக்கும் இது உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் வைரஸ் தொடர்பான சமீபத்திய தகவல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களும் இந்த App இல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார அமைச்சகம் (MoPH) Ehteraz App-ஐ தற்போது Apple App Store-லிருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது. இது விரைவில் Android பயனர்களுக்கும் கிடைக்கும் என்று அமைச்சகம் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த அப்ளிகேஷன் கீழ்க்கண்டவாறு இயங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சிவப்பு, மஞ்சள், சாம்பல் மற்றும் பச்சை என்ற வகைகளின் படி அதிகாரப்பூர்வ அமைப்புகளிலிருந்து பயனரின் சுகாதார தகவல்களை தானாகவே பிரித்தெடுப்பதன் மூலம் ஒவ்வொரு பயனரின் சுயவிவரமும் QR குறியீட்டோடு இணைக்கப்படும்.

Source : QSMS