கத்தார் இந்திய தூதரகம் பாஸ்போர்ட் சேவைகளுக்கான சிறப்பு முகாம் ஏற்பாடு.!

Embassy Special Consular Camp

கத்தாரில் உள்ள இந்திய தூதரக சிறப்பு முகாம் ஆசியா டவுனில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கத்தார் இந்திய தூதரகம் இன்று (24-11-2020) அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு முகாம் வருகின்ற 27-11-2020 வெள்ளிக்கிழமை அன்று காலை 10:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை ஆசியா டவுன் மற்றும் தொழில்துறை பகுதியில் வாழும் இந்திய தொழிலாளர்களுக்கு பாஸ்போர்ட் சேவைகளை எளிதாக்குவதற்காக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் இன்று ஒரே நாளில் 10,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை.!

வெள்ளிக்கிழமை காலை 8:00 மணி முதல் ஆன்லைன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு உதவி வழங்க தூதரக குழு அங்கே இருப்பார்கள் எனவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த சிறப்பு தூதரக முகாமின் போது, அனைத்து COVID-19 சுகாதார நெறிமுறைகளையும் பின்பற்றுமாறு தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

சிறப்பு முகாம் நடைபெறும் முகவரி:

  • Amphitheatre டிக்கெட் கவுண்டர்,
  • கதவு எண்: 8
  • கிராண்ட் மால்
  • ஆசியா டவுன்.

கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய ஏழு பேர் கைது‌.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…