கத்தார் – சவுதி எல்லைகள் திறப்பு: நுழைவு மற்றும் வெளியேறும் நடைமுறைகள் வெளியீடு.!

entry and exit procedures
Pic: AlJazeera

கத்தார் மற்றும் சவுதி அரேபியா இடையே நில வழி, வான் வழி மற்றும் கடல் வழி எல்லைகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, Abu Samra எல்லையில் இருந்து வரும் அனைத்து வருகையாளர்களுக்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட உள்ளது.

கத்தார் மாநில அரசு தகவல் தொடர்பு அலுவலகம் (GCO) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறிப்பிட்டுள்ளது.

கத்தார், பஹ்ரைன் உறவுகள் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும்; பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர்.!

கீழ்க்கண்ட நடைமுறைகள் வருகின்ற ஜனவரி 20, 2021 முதல் அமல்படுத்தப்படும் என்றும், இவை கத்தாரின் தற்போதைய COVID-19 பயண மற்றும் வருவாய் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Abu Samra எல்லையிலிருந்து கத்தார் வருபவர்கள் அனைவரும் COVID-19 சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட COVID-19 நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.

கத்தார், சவுதி இடையே நேரடி விமானங்கள்; முன்பதிவை தொடங்கியது கத்தார் ஏர்வேஸ்..!

வருகையாளர்கள் அனைவரும் ஒரு வாரம் ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள், வருவதற்கு முன்னர் டிஸ்கவர் கத்தார் வலைத்தளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.

Abu Samra எல்லை வழியாக பயணிக்க விரும்பும் கத்தார் நாட்டைச் சேர்ந்த அனைத்து பயணிகளும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அவர்கள் திரும்பும் தேதிக்கு ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு முன்பதிவு செய்ய வேண்டும்.

அனைத்து வருகையாளர்களும் ஹோட்டல் தனிமைப்படுத்தலைக் கடைப்பிடிப்பதற்கான முறையான உறுதிமொழியில் கையெழுத்திட வேண்டும் மற்றும் COVID-19 நோய் தொற்றுகளைக் கண்டறியும் EHTERAZ பயன்பாட்டைப் பதிவிறக்குவது உட்பட தனிமைப்படுத்தலின் கொள்கைகளையும், நிபந்தனைகளையும் பின்பற்ற வேண்டும்.

கத்தார் மற்றும் உலகெங்கிலும் உள்ள COVID-19 பொது சுகாதார குறிகாட்டிகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மாற்றத்திற்கு உட்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார், அமீரகம் எல்லைகள் மூன்று ஆண்டுகளுக்கு பின் இன்று மீண்டும் திறப்பு.!

த்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…