கத்தாரில், தொழிலாளர்கள் புகார்களை தெரிவிக்க SMS வசதி அறிமுகம்.!

கத்தார் நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகம், தொழிலாளர்கள் தங்களுடைய புகார்களை பதிவு செய்ய 24 மணிநேர SMS செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு தொழிலாளர்கள், அவர்களின் சம்பளம், உணவு, தங்குமிடம் போன்றவற்றின் புகார்களை தெரிவிக்க 92727 என்ற எண்ணுக்கு SMS செய்யலாம் என்பதாக கூறியுள்ளது.

மேலும், தொழிலாளர்கள் தங்களுடைய புகார்களை அனுப்பும் போது, தங்களது கத்தார் ID அல்லது விசா எண்ணுடன், 5 என்ற இலக்கத்தையும் சேர்த்து அனுப்ப வேண்டும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.