கத்தாரில் உள்ள FAHES வாகன சோதனை மையங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியது.!

Photo: Abdul Basit / The Peninsula

கத்தாரில் உள்ள FAHES வாகன தொழில்நுட்ப சோதனை மையங்கள் போக்குவரத்து துறையின் ஒத்துழைப்புடன் அதன் செயல்பாடுகளை நேற்று முதல் (09-08-2020) மீண்டும்‌ தொடங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக
FAHES வாகன சோதனை மையங்கள் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: இந்திய பயணிகள் COVID-19 பரிசோதனை செய்ய கத்தார் ஏர்வேஸ் அங்கீகரித்துள்ள ஆய்வகங்கள்.!

இந்நிலையில், தொழில்துறை பகுதியில் உள்ள மையங்களைத் தவிர அனைத்து மையங்களும் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் மீண்டும் ஆய்வுகளை தொடங்கும் என FAHES அறிவித்துள்ளது.

மேலும், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வாகனங்கள் பரிசோதனை செய்ய அளிக்கப்படட்ட விலக்கு நிறுத்தப்பட்டுள்ளது என்றும், ஜூலை 31க்குப் பிறகு ஆன்லைனில் சோதனைக்கு பதிவு செய்த வாகனங்கள் FAHES மையங்களில் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

COVID-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இஸ்திமாரா (registration) புதுப்பித்தலுக்கு வாகன தொழில்நுட்ப ஆய்வகங்கள் கடந்த சில மாதங்களாக விலக்கு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கத்தாரிலிருந்து இந்தியா செல்லும் விமானங்கள் குறித்த தூதரகத்தின் அப்டேட்..!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5

? Telegram https://t.me/tamilmicsetqatar