FIFA Club World Cup விருது வழங்கும் நிகழ்ச்சி: பெண் நடுவர்களுடன் கைகுலுக்க மறுத்த கத்தார் இளவரசர்.!

FIFA Club World Cup

கத்தாரில் FIFA Club உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரின் போது விருது வழங்கும் நிகழ்ச்சியில் பெண் நடுவர்களுடன் கைகுலுக்க கத்தார் இளவரசர் மறுத்துவிட்டார்.

கத்தாரில் நேற்று (12-02-2021) நடைபெற் கிளப் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் டைக்ரஸ் யுஏஎன்எல் (Tigres UANL) அணியை பேயர்ன் முனிச் (Bayern Munich) 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

கத்தார் வரும் பயணிகளின் கவனத்திற்கு: இனி தனிமைப்படுத்தல் கட்டாயம்.!

இதனைத் தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்ச்சியில் கத்தார் இளவரசரான HE ஷேக் ஜோன் பின் ஹமாத் பின் கலீஃபா அல் தானி அல் தானி (Sheikh Joaan bin Hamad bin Khalifa Al-Thani) அவர்கள் கலந்து கொண்டார். இவர் கத்தார் தற்போதைய அமீரின் சகோதரர் ஆவார்.

அப்போது சிறப்பாக செயல்பட்ட நடுவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. ஆண் நடுவர்கள் இளவரசர் உடன் கைகுலுக்கி சென்றனர். ஆனால், பெண் நடுவர்களுக்கு கைகுலுக்க இளவரசர் மறுத்து விட்டார்.

இஸ்லாமியச் சட்டப்படி அன்னியப் பெண்களைத் தொடக் கூடாது என்ற காரணத்தால் அவர் அப்படி நடந்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தோஹாவில் உள்ள இந்த வீதி மூன்று மாதத்திற்கு மூடல்.!