மூன்று ஆண்டுக்கு பின் சவுதி ஏர்லைன்ஸ் முதல் விமானம் கத்தாரில் தரையிறங்கியது.!

First Saudi Airlines flight
Pic: @qatarairways

சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இருந்து கத்தார் தலைநகர் தோஹாவுக்கு முதல் நேரடி விமானம் நேற்று (11-01-2021) மாலை ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

சவுதி தலைநகர் ரியாத் மற்றும் கத்தார் தலைநகர் தோஹாவுக்கும்‌ இடையே விமான சேவைகள் மீண்டும் தொடங்கியதை அடுத்து, முதல் சவுதி ஏர்லைன்ஸ் விமானம் நேற்று மாலை ஹமாத் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.

மூன்று ஆண்டுகால தடைக்கு பின்னர், கத்தார் வந்த சவுதி அரேபியா பயணிகளை ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் வரவேற்றனர்.

முடிவுக்கு வந்தது 3 ஆண்டுகால தடை; கத்தாரிலிருந்து சவுதிக்கு முதல் விமானம் புறப்பட்டது.!

இதேபோல், கத்தார் ஏர்வேஸ் (QR 1164 Boeing 787-8) விமானம் சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள கிங் ஹாலித் சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று புறப்பட்டு சென்றது.

சவுதி அரேபியா விமான நிறுவனமான Saudia ஏர்லைன்ஸ் ரியாத் மற்றும் ஜித்தாவில் இருந்து தோஹாவுக்கு விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ளது.

ரியாத்தில் இருந்து வாரந்தோறும் 4 விமானங்களும், ஜித்தாவிலிருந்து வாரந்தோறும் 3 விமானங்களும் இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

சவுதி, கத்தார் இடையே நேரடி விமானங்கள்; முன்பதிவை தொடங்கியது சவுதி ஏர்லைன்ஸ்.!

த்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…