கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 5 பேர் கைது‌.!

Five more arrested for violating home quarantine rules
Image Credits: Gulf-Times

கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளளை மீறியதற்காக மேலும் 5 நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக கத்தார் செய்தி நிறுவனம் நேற்று (09-09-2020) தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் (COVID-19) பரவலை கட்டுப்படுத்த கத்தார் முயற்சித்து வரும் வேளையில், அரசாங்கத்தின் உத்தரவுகளை சிலர் மீறி, பொது சுகாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என்பதாக கூறப்பட்டுள்ளது.

கத்தாரில், வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அனைவரும் தங்கள் பாதுகாப்பு மற்றும் பிறரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைச்சகம் குறிப்பிட்டுள்ள விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர்கள்:

  1. Abdullah Mohammed Abdullah Al Misfer Al Shamrani
  2. Nayef Abdul-Rashid Breida
  3. Hassan Hani Abdullah Suleiman
  4. Hadi Mohammed Hadi Al Athba Al Marri
  5. Said Saleh Hamad Saleh Al Makhdoubeya

முன்னதாக, கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் நிபந்தனைகளை மீறியதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை (06-09-2020) அன்று 6 நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Related posts

கத்தார் அல் சாத் கால்பந்து அணியின் மேலாளருக்கு கொரோனா.!

Editor

கத்தாரில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஊழியர்கள் பணிபுரிய அனுமதி; அமைச்சரவை கூட்டத்தில் முடிவு.!

Editor

COVID-19 காலத்தில் சேவை ஆற்றும் சுகாதார ஊழியர்களுக்கு அமீர் பாராட்டு.!

Editor