தோஹா உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னை வரும் 14 விமானங்கள் ரத்து..!

flights cancelled in Chennai due to COVID-19 panic 
Flights cancelled

சீனாவை தொடர்ந்து உலக நாடுகளில் கொரோனா வைரஸ் (COVID-19) தாக்கம் அதிகரித்து வருவதால் பல்வேறு வெளிநாடுகளில் சுற்றுலா விசா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் அச்சம் ஏற்படுத்திய பீதியின் காரணமாக விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்த வண்ணம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய நாட்டிலும் ஏப்ரல் 14 வரை அனைத்து விசாக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைவால் குவைத்தில் இருந்து வரவேண்டிய 3 விமானங்கள் சென்னை வரவில்லை.

மெலும், தாய்லாந்தில் இருந்து 2, மஸ்கட்டில் இருந்து 2 மற்றும் தோஹா, சிங்கப்பூர், ஜெர்மனி, மலேசியா, இலங்கை, ஹாங்காங், துபாய் உள்ளிட்ட நகரங்களில் வரவேண்டிய 7 விமானங்கள் என மொத்தம் 14 விமானங்கள் சென்னைக்கு வரவில்லை.

கூடுதலாக, சென்னையில் இருந்து அந்த நகரங்களுக்கு செல்லவேண்டிய 14 விமானங்களும் புறப்படவில்லை.

கொரோனா வைரஸ் பீதியால் சென்னையில் மட்டும் 28 பன்னாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சென்னைக்கு வரக்கூடிய சரக்கு விமானங்களின் எண்ணிக்கையும் குறைந்து இருப்பதால் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#QatarCOVID-19 #Coronavirus #Doha #QatarTamilLatest #QatarTamil