மழையால் விமானங்கள் தாமதம்…

Dubai airport flights delayed, cancelled due to heavy rain, flood.(image source:The hindu)

உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் இன்டர்நேஷனல் ஏர்போர்ட், சனிக்கிழமை அன்று அதிக மழை மற்றும் வெள்ளம் காரணமாக விமானங்கள் சிலவற்றை ரத்துசெய்தது, சில விமானங்கள் திசை திருப்பப்பட்டது மற்றும் சில தாமதமாக வந்ததாக துபாய் விமான நிலையம் தெரிவித்துள்ளது.

விமானங்கள் நாள் முழுவதும் தாமதமாகவே வந்தது, சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், சில விமானத்தை அருகிலுள்ள அல் மக்தூம் விமான நிலையத்திற்கு திசை திருப்பி விடப்பட்டுள்ளன என்று அரசுக்கு சொந்தமான துபாய் விமான நிலையம் ட்விட்டரில் பதிவிட்டுருந்தது.

சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் விமான நிலையத்தின் ஓடுபாதையின் ஒரு பகுதி நீரில் மூழ்கியிருப்பதைக் காட்டியது.

Emirates மற்றும் Flydubai நிறுவன விமானங்களுக்கு துபாய் விமான நிலையம் தான் முக்கிய தளமாகும், துபாய்க்கு வந்து செல்லும் பல விமானங்கள் தாமதமாகிவிட்டதாக Emirates கூறியுள்ளது மற்றும் Flydubai நிறுவனத்தின் விமானங்கள் தாமதமானதாகவும் சிலவற்றை திசை திருப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தது.