கத்தாரில் வண்ணமயமான மலர் திருவிழா துவக்கம்.!

Flower Festival begins
Pic: MME

கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள Souq Waqif-ல் வண்ணமயமான மலர் திருவிழா நேற்று (27-01-2021) முதல் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

இந்த திருவிழாவில் பல உள்ளூர் மரப்பண்ணைகள் (nurseries) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, தோட்டக்கலை ஆர்வலர்களுக்கு பல்வேறு மலர்களின் மரக்கன்றுகளை வாங்குவதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது.

அமீரகத்திற்கு விமான சேவைகளை தொடங்கியது கத்தார் ஏர்வேஸ்.!

இந்த வண்ணமயமான மலர் திருவிழாவை Souq Waqif நிர்வாகம் மற்றும் வேளாண் விவகாரத்துறை மற்றும் பொது பூங்காக்கள் துறையால் பிரதிநிதித்துவப்படுத்தும் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

Souq Waqif-ன் மேற்கு சதுக்கத்தில் (western square) நடைபெறும் இந்த மலர் திருவிழா பிப்ரவரி 9, 2021 வரை தொடரும் என்றும், காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் அல் கோர் கார்னிவல் திருவிழா துவக்கம்; அனைவருக்கும் அனுமதி இலவசம்.!