தோஹா, துபாய் இடையே நேரடி விமான சேவைகள் தொடக்கம்.!

flydubai resume Doha flights
Pic: flydubai

கத்தார் தலைநகர் தோஹாவுக்கு வருகின்ற ஜனவரி 26ம் தேதி முதல் விமான சேவையை மீண்டும் தொடங்குவதாக Flyadubai விமான நிறுவனம் அறிவித்துள்ளது. துபாய் மற்றும் தோஹா இடையே தினசரி இரட்டை விமான சேவையை இது வழங்கும்.

அதன்படி, Flydubai FZ 001(B737-800) விமானம் துபாய் சர்வதேச விமான நிலையம் Terminal 2-லிருந்து காலை 8:45 மணிக்கு (அமீரக நேரம்) புறப்பட்டு, தோஹாவில் உள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் காலை 9:00 மணிக்கு (கத்தார் நேரம்) தரையிறங்கும் என்றும், இடைவிடாத இந்த பயணம் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நீடிக்கும் என்றும் Flydubai இணையத்தில் குறிப்பிட்டுள்ளது.

தோஹா, ஷார்ஜா இடையே நேரடி விமான சேவைகள் தொடக்கம்.!

மேலும், துபாயிலிருந்து தோஹாவுக்கு மற்றொரு விமானமும் அதே நாளில் இரவு 7:45 மணிக்கு (அமீரக நேரம்) கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், ஜனவரி 18ம் தேதி முதல் ஏர் அரேபியா விமான நிறுவனம் ஷார்ஜா மற்றும் தோஹா இடையே தினசரி விமானங்களை இயக்கத் தொடங்கியது. அமீரகத்திலிருந்து கத்தார் செல்லும் விமானங்களை முதன் முதலில் அறிவித்தது இந்த விமான நிறுவனமாகும்.

கத்தாரில் மோசமான வானிலை: அல் கோர் கார்னிவல் திருவிழா ஒத்திவைப்பு.!