கத்தாரில், சட்டத்தின் மூலம் தடைசெய்யப்பட்டுள்ள கூட்டங்கள் மற்றும் இடங்கள்.!

கொரோனா வைரஸ் (COVID-19) பரவுவதை தடுக்கும் விதமாக கத்தார் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேய்க் காலித் பின் கலீஃபா அல்தானி அவர்கள் எடுத்துள்ள முடிவின்படி, சட்டத்தின் மூலம் தடை செய்யப்பட்டுள்ள கூட்டங்கள் மற்றும் அதைச் சார்ந்த இடங்களை உள்துறை அமைச்சகம் தமிழ் மொழியில் கீழ்க்கண்ட படத்தின் மூலம் விளக்கியுள்ளது.

மேலும், COVID-19 பரவலைக் கட்டுப்படுத்த சட்ட விதிகளின் மூலம் அனைத்து வகையான கூட்டங்களையும் தடுப்பதற்கான முடிவை அனைவரும் கண்டிப்பாக பின்பற்றுமாறு உள்துறை அமைச்சகம் நினைவூட்டி உள்ளது.

கத்தாரில், அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செயல்படுத்த படுவதாகவும் தெரிவித்துள்ளது.