கத்தாரில் இன்று மசூதிகளில் ஜூம்ஆ தொழுகையோ அல்லது லுஹர் தொழுகையோ நடைபெறாது.!

Image Credits: جريدة الراية القطرية

கத்தாரில் இன்று (19-06-2020) மசூதிகளில் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையோ, லுஹர் தொழுகையோ நடைபெறாது என Endowments மற்றும் இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கத்தாரில் உள்ள மசூதிகளில் தொழுகைகள் நிறுத்தப்பட்டு, கடந்த ஜூன் 15ஆம் தேதி 500 பள்ளிவாசல்கள் ஜந்து நேரக் தொழுகைக்காக திறக்கப்பட்டது.

அதன்படி, இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையோ அல்லது அதற்கு பதிலாக லுஹர் தொழுகையோ மசூதிகளில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழிபாட்டாளர்கள் தங்களது வீடுகளில் லுஹர் தொழுகையை நிறைவேற்றிக் கொள்ளுவர்கள் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும், அமைச்சகம் மீதமுள்ள பிரார்த்தனைகள் அறிவிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடைமுறைகளின்படி, மசூதிகளில் சரியான நேரத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. ‌