COVID-19 காலத்தில் சேவை ஆற்றும் சுகாதார ஊழியர்களுக்கு அமீர் பாராட்டு.!

Pic: Twitter/QNA

கத்தாரில் Education City மைதானம் நிறைவடைந்ததை அறிவிக்கும் முகமாக கத்தார் அமீர் அவர்கள் ஆன்லைன் மூலம் ஆற்றிய உரையில் கூறியதாவது:

உலகம் முழுவதும் உள்ள அன்பர்களே,
2022 உலகக் கோப்பைக்கான மூன்றாவது மைதானமான Education City மைதானம் நிறைவடைந்ததை நாங்கள் கொண்டாடுகின்றோம். இந்த நேரத்தில், உண்மையான வெற்றியாளர்களாக மருத்துவ ஊழியர்கள் மற்றும் COVID-19 தொற்று நோய்க்கு எதிராக முன்னணியில் நின்று பணியாற்றும் அனைத்து அணிகளின் ஊழியர்களுக்கும் நாங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பல மக்களின் வாழ்க்கையை காப்பாற்றிய மற்றும் அவர்களுக்கு நம்பிக்கையை மீண்டும் கொண்டு வந்த உங்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிப்பதோடு உங்களை ஆதரிக்கிறோம்.

உலகம் மீண்டும் திறக்கத் தொடங்கும் போது, ​​உங்கள் தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையின் மூலம் வரவிருக்கும் சிறந்த நாட்களை நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம், எங்கள் மைதானங்களில் கால்பந்து விளையாட்டின் நட்சத்திர வீரர்களைக் கண்டு நாங்கள் ஒன்றாக மகிழ்வோம்.

மேலும், உலகக் கோப்பைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வரும் விருந்தினர்களை வரவேற்க கத்தார் முன்னெப்போதையும் விட உற்சாகமாக எதிர்பார்க்கிறது‌ என்றார்.

Speech of H.H. the Amir at the celebration of the completion of the Education City Stadium

His Highness, the Amir Sheikh Tamim bin Hamad Al Thani, delivered a speech on the occasion of celebrating the readiness of the Education City Stadium, the third stadium of the FIFA World Cup Qatar 2022, in which he commemorates the medical heroes of the medical teams and teams working in the front lines to fight the COVID-19 in a virtual ceremony broadcast on beIN SPORTS. #ILoveQatar #Qatar #QatarNews #WorldCup2022 #EducationCityStadium #YourSafetyIsMySafety #COVID19 #Qatar2022

Posted by ILQ – iloveqatar.net on Monday, June 15, 2020