சவுதியில் நடைபெற்ற 41வது GCC உச்சி மாநாட்டின் இறுதி அறிக்கை.!

Gulf summit closing statement
Pic: @Marsalqatar

சவுதி அரேபியாவில் உள்ள அல் உலா (Al Ula) நகரில் நேற்று (05-01-2021) நடைபெற்ற 41வது வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உச்சி மாநாட்டில் வளைகுடா நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர அல் உலா ஒற்றுமை ஒப்பந்தத்தில் வளைகுடா தலைவர்கள் கையெழுத்திட்டனர்.

கத்தார் உடனான உறவை மீட்டெடுக்க நான்கு நாடுகள் ஒப்புதல்; விரைவில் விமானங்களும் அனுமதி.!

பின்னர், ஊடகங்களுக்கு உரையாற்றிய சவுதி வெளியுறவு அமைச்சர் விமானங்களை தொடங்குவது உட்பட கத்தார் நாட்டுடனான உறவை மீட்டெடுக்க நான்கு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

வளைகுடா உச்சி மாநாட்டின் இறுதி அறிக்கையின் சுருக்கம்:

  • அரசியல் நிலைப்பாடுகளை ஒன்றிணைப்பது மூலமும், மூலோபாய கூட்டாண்மைகளை வளர்ப்பது மூலமும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) பங்கை வலுப்படுத்துவதை வளைகுடா உச்சி மாநாடு உறுதிப்படுத்தியுள்ளது.
  • எந்த மாநிலத்தின் இறையாண்மையும் மீறப்படக்கூடாது என மாநிலங்கள் உறுதிப்படுத்தின.
  • இந்த அல் உலா ஒப்பந்தம் வளைகுடா ஒத்துழைப்பு மற்றும் சகோதர உறவுகளை மீட்டெடுக்க வேண்டும்.
  • இந்த ஒப்பந்தம் நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடக்கூடாது என கூறுகின்றது.
  • வளைகுடா பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தல் வந்தாலும் கூட்டாக எதிர்த்துப் போராட வேண்டும் இந்த ஒப்பந்தம் கூறுகிறது.
  • வளைகுடா உச்சி மாநாடு வளைகுடா ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான புதிய பக்கத்தைக் குறிக்கிறது.
  • சவால்களை எதிர்கொள்ள (GCC) மாநிலங்களிடையே இராணுவ ஒருங்கிணைப்பை மேம்படுத்த வேண்டும்.

இலங்கையில் உள்ள கத்தார் விசா மையம் விரைவில் திறக்கப்படும் – MoI மூத்த அதிகாரி.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…