சூடானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கத்தார் அமீர் 50 மில்லியன் ரியால் நன்கொடை.!

H.H. The Amir donates 50 million riyals to Sudan
Pic: Shutterstock/QC

சூடானில் கடந்த ஒரு மாத காலமாக பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சூடானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் விளைவுகளைத் தணிக்க, சூடானுக்கு அவசர நிவாரண உதவிகளை அனுப்புமாறு கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் முன்னதாக உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சூடான் வெள்ள பெருக்கு: கத்தார் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது..!

அமீரின் இந்த உத்தரவை செயல்படுத்தும் விதமாக, சூடான் நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கத்தார் அபிவிருத்திக்கான நிதியம், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான நிலைக்குழுவுடன் இணைந்து தொடர்ச்சியாக ஆதரவளித்து வருகிறது.

இந்நிலையில், சூடானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் “Peace for Sudan” என்ற பிரச்சாரத்திற்கு கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் QAR 50 மில்லியன் ரியால்களை நன்கொடையாக வழங்கினார்.

இதையும் படிங்க: சூடான் வெள்ள பெருக்கு: கத்தார் 46 டன் மருத்துவ மற்றும் நிவராண உதவிகளை அனுப்பி வைத்தது.!!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…