கத்தார் நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 4,482 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.!

Hamad Port Customs
Pic: Qatar Customs

கத்தார் நாட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தும் முயற்சியை ஹமாத் துறைமுக சுங்க அதிகாரிகள் முறியடித்தனர்.

இதுகுறித்து கத்தார் சுங்கம் ட்வீட்டர் பதிவில், துணி ஏற்றுமதிக்குள் மறைத்து கடத்த முயன்ற மெல்லும் புகையிலை பொருட்களை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கத்தாரில் கோலாகலமாக தொடங்கிய 5வது அறுவடை திருவிழா.!

மேலும், அதிகாரிகள் பறிமுதல் செய்த இந்த புகையிலை பொருட்களின் மொத்த எடை சுமார் 4,482 கிலோ என்றும் சுங்கம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமான பொருட்களை நாட்டிற்கு கொண்டு செல்வதற்கு எதிராக அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், சுங்க அதிகாரிகள் சமீபத்திய சாதனங்களைக் கொண்டு செயல்படுகிறார் என்றும், கடத்தல்களை சமாளிக்க அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் WOQOD புதிய பெட்ரோல் நிலையத்தை திறந்துள்ளது.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…