கத்தாரின் வடக்கு பகுதிகளில் நேற்று பலத்த மழையுடன் ஆலங்கட்டிகள் விழுந்தன.!

Al Wasmi season set to begin in Qatar on Friday
Pic: Qatar Weather

கத்தாரின் வடக்குப் பகுதிகளில் நேற்று (30-09-2020) பலத்த மழையுடன் ஆலங்கட்டிகளும் அதிக எண்ணிக்கையில் விழத் தொடங்கின.

இதுகுறித்து கத்தார் வானிலை ஆய்வுத்துறை ட்வீட்டில், கததாரின் வடக்கு பகுதிகளில் நேற்று தொடர்ச்சியாக, வலுவான காற்றுடன் மிதமானது முதல் பலத்த மழை பெய்துள்ளது என்றும், சில நேரங்களில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மறைந்த குவைத் அமீரின் இறுதி சடங்கில் பங்கேற்றார் கத்தார் அமீர்.!

கத்தாரில் நேற்று பிற்பகல் அதிகபட்சமாக Al Ruwais பகுதியில் 21.8 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், இந்த மழை நேரத்தின்போது, பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சில உதவிக் குறிப்புகளைப் கத்தார் வானிலை ஆய்வுத்துறை பகிர்ந்து கொண்டுள்ளது.

  • இடியுடன் கூடிய மழைக்காலங்களில் வீட்டுக்குள்ளேயே இருங்கள்.
  • நீங்கள் வாகனத்தில் இருந்தால் ஜன்னல்களை மூடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • வீட்டுக்கூரை அல்லது உயர்ந்த மரங்கள் மற்றும் மின் கம்பங்களுக்கு அருகில் நிற்பதைத் தவிர்க்கவும்.
  • திறந்த நீரிலிருந்து விலகி இருங்கள்.

கத்தார் வடக்கு பகுதியில் இன்று (30-09-2020) ஆழங்கட்டி மழை..!#QatarTamilNews | #Qatar | #Rain | #QMDVideo courtesy: Qatar Weather

Posted by Tamil Micset Qatar on Wednesday, 30 September 2020

 

இதையும் படிங்க: கத்தார் பெட்ரோலியம் அக்டோபர் மாதத்திற்கான எரிபொருள் விலைகள் அறிவிப்பு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…