கத்தார் நாட்டில் ஆம்புலன்ஸுகளுக்கு உதவும் ட்ரோன் சேவை..!

Qatar HMC introduce emergency service Drone

கத்தார் நாட்டில் அவசர நேரத்தில் ஆம்புலன்ஸுகளுக்கு உதவும் வகையில் புதிதாக ட்ரோன் சேவை
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த, சேவை மூலம் விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி கிடைக்கும் வகையில் சம்பவ இடத்திற்கு ட்ரோன் சென்று, விபத்து நடந்த இடம், விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட தகவல்களை படம்பிடித்து ஆம்புலன்ஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கும்.

பின்னர், பாதிப்படைந்தவரின் தன்மையை அறிந்து கொண்டு ஆம்புலன்ஸுகள் விபத்து நடந்த இடத்திற்கு செல்ல ஏதுவாக அமையும். இந்த சேவையை, கத்தார் ஹமாத் மெடிக்கல் கார்ப்பரேஷன் (HMC) அறிமுகப்படுத்தியுள்ளது.