கத்தாரில் உள்ள ICBF அலுவலகத்தில் தூதரக சேவைகளை பெறலாம்.!

Qatar Indian Embassy
Pic: India In Qatar

கத்தார் இந்திய தூதரகத்தின் கீழ் உள்ள ICBF என்ற அமைப்பு துமாமாவில் உள்ள தனது அலுவலகத்தில் தூதரக சேவைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், கத்தாரில் புதிதாகப் பிறந்த இந்திய குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்குதல், பழைய பாஸ்போர்ட் புதுப்பித்தல் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தற்பொழுது, COVID-19 கட்டுப்பாடுகள் காரணமாக அலுவலகத்தில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், EHTERAZ பயன்பாட்டில் பச்சைநிறக் குறியீடு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், சமூக இடைவெளி போன்றவை வளாகத்தில் பின்பற்றப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ICBF அலுவலகத்திற்கு செல்லும் முன் getappointment.icbfqatar.org
என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

ICBF அலுவலகம் Villa No 47, Nuaija-வில் உள்ள ஒருங்கிணைந்த இந்திய சமூக மையத்தில் அமைந்துள்ளது.

Source: The Peninsula Qatar