இந்தியா, கத்தார் இடையே சிறப்பு விமான சேவைகள் மேலும் இரண்டு மாதங்கள் நீட்டிப்பு..!

India-Qatar travel bubble extended until October 31
Pic: AFP/GETTY IMAGES

இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு இடையே சர்வதேச விமான போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதால் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக பிற நாடுகளுடன் “Air Bubble” எனும் ஒப்பந்தம் போடப்பட்டு அதன் மூலம் இந்தியர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையை வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியா மற்றும் கத்தார் இடையே சிறப்பு விமான சேவைகளை தொடங்க இருநாட்டு அரசாங்கமும் ஒப்புக்கொண்டதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி முதல் ஆகஸ்ட் 31 வரை சிறப்பு விமான சேவைகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: கத்தார், இந்தியா இடையே ஆகஸ்ட் 18 முதல் சிறப்பு விமான சேவைகளை தொடங்க ஒப்புதல்.!

இந்நிலையில், இந்த மாத இறுதியுடன் முடிவடையவிருந்த இந்த சிறப்பு விமான சேவைகள் அடுத்த இரு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும், Air Bubble ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயக்கப்படும் விமான சேவைகள் அக்டோபர் மாதம் 31ம் தேதி வரையிலும் தொடரும் என்றும் கத்தார் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையேயான சர்வதேச விமான போக்குவரத்து அக்டோபர் 31ஆம் தேதிக்கு முன்னரே இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டால், Air Bubble ஒப்பந்தம் இடைநிறுத்திக்கொள்ளப்படும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: VBM 6ம் கட்டம்: கத்தாரில் இருந்து தமிழகத்திற்கு செல்லும் விமானங்களின் பட்டியல் வெளியீடு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

 Facebook

Twitter

Instagram