வளைகுடா நாடுகளுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வரவேற்ற இந்தியா.!

India welcomed gulf reconciliation
Pic: DMO

சவுதி அரேபியாவில் உள்ள அல் உலா (Al Ula) நகரில் நேற்று முன்தினம் (05-01-2021) நடைபெற்ற 41வது வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உச்சி மாநாட்டில் வளைகுடா நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர அல் உலா ஒற்றுமை ஒப்பந்தத்தில் வளைகுடா தலைவர்கள் கையெழுத்திட்டனர்.

கத்தார் உடனான உறவை மீட்டெடுக்க அமீரகம் ஒப்புதல்; வர்த்தகம், போக்குவரத்துக்கு விரைவில் அனுமதி.!

நாடுகளுக்கு இடையிலான சமரசத்தையும் மற்றும் நல்லிணக்கத்தையும் இந்தியா வரவேற்றுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த GCC உச்சி மாநாட்டில் நேர்மறையான முன்னேற்றங்களைக் கண்டதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும், நாடுகளுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வரவேற்கிறோம் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Anurag Srivastava தெரிவித்துள்ளார்.

வளைகுடா நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தம்: FIFA தலைவர் வரவேற்பு.!

கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக துண்டிக்கப்பட்ட உறவுகளை கத்தார் மற்றும் நான்கு நாடுகளுக்கு இடையிலான அனைத்து உறவுகளையும் மீட்டெடுப்பதற்கு அல் உலா ஒப்பந்தத்தில் வளைகுடா தலைவர்கள் நேற்று முன்தினம் கையெழுத்திட்டனர்.

GCC-யின் அனைத்து நாடுகளுடன் இந்தியா சிறந்த உறவைப் பகிர்ந்து கொள்கிறது, இத்தகைய ஊக்கமளிக்கும் முன்னேற்றங்கள் பிராந்தியத்தில் அமைதி, முன்னேற்றம் மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் என நாங்கள் நம்புவதாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

மேலும், எங்களின் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த GCC நாடுகளுடன் தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

த்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…