கத்தாரில் இருந்து நாடு திரும்ப விரும்புவர்களின் தரவுகளை சேகரிக்கிறது கத்தார் இந்திய தூதரகம்.!

Qatar Indian Embassy
Pic: India In Qatar

கத்தாரில் உள்ள இந்திய தூதரகம், கத்தார் நாட்டிலிருந்து நாடு திரும்ப விரும்புவர்களின் தரவுகளை சேகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்தியாவுக்கான விமானச் சேவைகள் எப்போது ஆரம்பிக்கும் என்று உறுதியான முடிவுகள் எடுக்கப்படாத நிலையில், இந்த தரவுகளை சேகரிப்பது தகவலுக்காக மட்டுமே என்பதை தூதரகம் விளக்கியுள்ளது.

இதுகுறித்து, கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, தயவுசெய்து இந்த இணைப்பைப் பின்தொடர்ந்து கேள்விகளுக்கு பதிலளிக்கவும். இந்த கட்டத்தில், தகவல்களைத் தொகுப்பது மட்டுமே நோக்கம். இந்தியாவுக்கான விமானங்களை மீண்டும் தொடங்குவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த தரவுகளை கீழ்க்கண்ட லிங்க் வழியாக சென்று வழங்கலாம். இதில், பெயர், பாஸ்போர்ட் எண், விசா வகை போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாகவும், மேலும், நீங்கள் தாயகத்திற்கு திரும்புவதற்கான காரணமும் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவுகளை வழங்க இங்கு கிளிக் செய்யவும்.

விமானச் சேவைகள் ஆரம்பிக்கும் போது, கத்தாரிலுள்ள இந்திய தூதரகம் அறிவிப்பை வெளியிடும் என்றும் மேலும், தாயகம் திரும்ப விரும்பும் ஒவ்வொரு தனிப்பட்டவரும், தனித்தனியாக தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், குடும்பமாக இருந்தால் அனைவரும் வெவ்வேறாக நிரப்ப வேண்டும் என்றும் கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Source : TPQ