கத்தாரில் இருந்து தமிழகம் சென்ற பயணிகள் தூதரகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.!

Vande Bharath Mission phase6 flights From Qatar to India Air India Express announced

கத்தாரில் இருந்து நேற்று (23-06-2020) தமிழர்கள் வந்தே பாரத் மிஷனில் தாயகம் சென்றனர். கோயம்புத்தூர் வந்த அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வைத்திருந்தது, அனைத்து அமைப்பின் கூட்டமைப்புகள் மாவட்ட அரசு நிர்வாகத்திடம் அனுமதி பெற்று கோவை மாவட்ட நிர்வாகிகள், சகோதரர்கள் செவ்வாய் இரவு அத்தியாவசிய தேவைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி உதவி புரிந்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும், அரசு அதிகாரிகள் அவர்களை மாவட்ட வாரியாக பிரித்து பயணர்களின் வசதிக்கேற்ப அந்தந்த பகுதி தனிமைப்படுத்துதலில் தங்க வைக்கப்பட்டு அனைத்து வசதிகளையும் செய்து வருவதாகவும், அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுப்பி வைக்கப்பட்டு பயணர்களின் இல்லம் அனுப்பிவைக்க ஏற்பாடு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் இருந்து கோவைக்கு விமானத்தில் பயணம் செய்த பயணிகள் சிலர் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு கத்தார் இந்திய தூதரகத்திற்கும், தாயகம் அனுப்பும் பணியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ICC தலைவர் திரு.மணிகண்டன் அவர்களின் குழுவிற்கும், ICBF நிர்வாகத்திற்கும், ICBF Joint secretary திரு.சந்தோஷ் குமார் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விமானத்தில் ஒருங்கிணைந்த தமிழர்கள் பேரவை சார்பில், திரு.சந்தோஷ் குமார் அவர்களின் உதவியில் 11 பயணிகளுக்கு பயணசீட்டு பெறப்பட்டு தாயகம் செல்ல உதவப்பட்டது. தாயகம் செல்லும் சில பயணிகளுக்கு முகக்கவசம், கையுறை போன்றவைகளை நிர்வாகிகள் வலியுல்லாஹ், இப்ராஹிம், மற்றும் உறுப்பினர்கள் லால்பேட்டை அஹமது ரிலா, ஹாஜா ஆகியோர்கள் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

Source: ஒருங்கிணைந்த தமிழர் பேரவை கத்தார்.