இந்தோனேசியா விமான விபத்து: கத்தார் அமீர் உள்ளிட்டோர் இரங்கல்.!

Indonesian flight crash
Pic: iloveqatar.net

இந்தோனேசியாவில் கடந்த (09-01-2021) சனிக்கிழமை அன்று ஜகார்த்தாவில் இருந்து 62 பேருடன் புறப்பட்ட விமானம் தனது பயணத்தை தொடங்கிய 4 நிமிடங்களிலேயே விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

தொடர்பு இழந்த அந்த விமானத்தை அதிகாரிகள் தீவிரமாக தேடிய பின்பு, விமானம் கடலுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் உடைந்த விமானத்தின் பாகங்கள் கடலுக்குள் இருந்து மீட்கப்பட்டு வருகின்றன.

மூன்று ஆண்டுக்கு பின் சவுதி ஏர்லைன்ஸ் முதல் விமானம் கத்தாரில் தரையிறங்கியது.!

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக கத்தார் அமீர் அவர்கள் இந்தோனேசியாவின் அதிபர் ஜோகோ விடோடோவிடம் (Joko Widodo) தெரிவித்துள்ளார்.

இதேபோல், கத்தார் துணை அமீர் HH ஷேக் அப்துல்லா பின் ஹமாத் அல் தானி மற்றும் கத்தார் பிரதமரும், உள்துறை அமைச்சருமான ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஜீஸ் அல் தானி அவர்களும் இந்தோனேசியா அதிபரிடம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

கத்தாரில் கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றும் பிரச்சாரம் தொடக்கம்.!

த்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…