கத்தார் நாட்டில் உருவாகும் மிதக்கும் ஹோட்டல்கள்..!

international construction Qatar floating hotels

புதிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவதில் முன்னணி நாடாகத் திகழும் கத்தாரில், கெடைஃபேன் தீவில் பிரம்மாண்டமாக மிதக்கும் ஹோட்டல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

கத்தாரில் நடைபெற இருக்கும் சர்வதேச 2022 FIFA விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு, பல்வேறு கட்டுமானப் பணிகளையும் புதிய விரிவாக்கப் பணிகளையும் கத்தார் நாடானது துரிதமாகச் செய்து வருகிறது.

அதன் ஒரு அங்கமாக, கத்தாரின் கெடைஃபேன் தீவில், மிதக்கும் ஹோட்டல்கள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வருகின்றன இந்த ஹோட்டல்கள் 72 மீ நீளமும் 16 மீ அகலமும் இருக்கும், ஒவ்வொன்றும் 101 விருந்தினர் அறைகள், ஒரு உணவகம் மற்றும் ஒரு லவுஞ்ச் (lounge) பார் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இந்த மிதக்கும் ஹோட்டகள் மொத்தம் 1,616 அறைகளை உடையது. 16 நான்கு மாடி ஹோட்டல்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும். கத்தார் நிறுவனம் இதற்கான உரிமையைப் பெற்றுள்ளது.

இந்த மிதக்கும் ஹோட்டல்களை, விருது பெற்ற பின்னிஷ் கட்டிடக் கலை நிறுவனமான சிக்ஜ் ஆர்கிடெக்ட்ஸ் வடிவமைத்துள்ளது. இதன் மூலம், சர்வதேச சுற்றுலாப் பயணிகள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை கத்தார் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.