ஃபென்சிங் அணிகளுக்கு கத்தாரில் போட்டியிட தடை..!!

Israel bans fencing team from competing in Qatar.(image source:MEMO)

ஈரான் முன்வைக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலின் விளைவாக இஸ்ரேலிய நாட்டின் ஃபென்சிங்(கத்தி சண்டை) குழு கத்தார் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று ஊடக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனமான ஷின் பெட் கூறுகையில் “வளைகுடா பகுதிகளில் அச்சுறுத்தல் நிலை உயர்ந்துள்ளது” என்று கூறியதாக ஹாரெட்ஸ் நேற்று செய்தி வெளியிட்டது.

இஸ்ரேலிய கலாச்சார மற்றும் விளையாட்டு அமைச்சகம் கூறியதாவது “எங்கள் பகுதிகளில் சமீபத்திய நிகழ்வுகளின் நிலைமை குறித்து ஷின் பெட் மதிப்பீடு செய்ததன் காரணமாக, வளைகுடா பகுதிகளில் அச்சுறுத்தல் நிலை உயர்த்தப்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுருந்தது.

இதுபோன்ற காரணத்திற்காக ஷின் பெட் பாதுகாப்பு நிறுவனம் பாதுகாப்பை கருத்தில்கொண்டு வீரர்கள் செல்ல தடைவிதித்துள்ளது.

இந்த உத்தரவு குழுகளுக்கு மட்டுமே பொருந்தும், இஸ்ரேலிய நாட்டின் தனிநபர்கள் பங்கேற்க அனுமதி உள்ளது.

2019-ஆம் ஆண்டிற்கான The Fencing Grand Prix du Qatar வருகின்ற ஜனவரி 25 முதல் 27 வரை தோஹாவில் உள்ள Aspire zone-ல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.