கத்தாரில் நாளை மறுநாள் கட்டாரா பாரம்பரிய தோவ் விழா; ஏற்பாடுகள் தீவிரம்.!

Katara getting ready
Pics: Katara

கத்தாரில் பாரம்பரியமான தோவ் (கப்பல்) விழாவின் 10ஆம் பதிப்பு குவைத், ஓமான், ஈராக் மற்றும் தன்சானியா ஆகிய நாடுகளின் பங்களிப்புடன் நாளை மறுநாள் டிசம்பர் 1 முதல் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது.

10வது கட்டாரா பாரம்பரிய தோவ் விழா நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், அங்கு விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கத்தாரில் 10வது கட்டாரா பாரம்பரிய தோவ் (கப்பல்) விழா டிசம்பரில் தொடக்கம்.!

இந்த விழாவில் போட்டிகள், கடல் நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு கலாச்சார நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், பாரம்பரிய கைவினைப் பொருட்கள், கப்பல் கட்டும் செயல்முறை மற்றும் பண்டைய கைவினைப் பொருட்களைக் காண்பிக்கும் பட்டறைகள் விழாவில் இடம் பெற்றுள்ளது.

தோவ் விழாவின் அனைத்து நாட்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் Omani Folk Band கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் தொழிலாளர்கள் வேலை மாற்ற புதிய நடைமுறை.!

கத்தார் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி, இந்த பாரம்பரியமான தோவ் விழா நடைபெறும் என கத்தார் பொது மேலாளர் Dr. Khalid bin Ibrahim al-Sulaiti கூறியுள்ளார்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…