கத்தாரில் அரசு சேவை மையங்கள் மூலம் கிடைக்கும் சேவைகள் இடைநிறுத்தம்; தொழிலாளர் அமைச்சகம் முடிவு.!

Labour ministry suspends two services through government centers
Pic: Twitter/ ADLSAQa

கத்தார் நிர்வாக மேம்பாடு தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சகம் (MADSLA) அரசு சேவை மையங்கள் மூலம் கிடைக்ககூடிய இரண்டு சேவைகளை இடைநிறுத்த முடிவு செய்துள்ளது.

அதன்படி, தொழில் திருத்தம் கோரிக்கைகள் மற்றும் வணிக உரிம சேவைகள் அமைச்சகத்தின் வலைத்தளத்தின் மூலம் டிஜிட்டல் முறையில் வருகின்ற ஆகஸ்ட் 23ம் தேதி முதல் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் இருந்து இலங்கைக்கு சிறப்பு விமானம் அறிவிப்பு..!

இதுகுறித்து அமைச்சகம் ட்வீட்டில், வரும் ஆகஸ்ட் 23 முதல் அரசு சேவை மையங்கள் மூலம் கிடைக்ககூடிய தொழில் திருத்தம் கோரிக்கை மற்றும் வணிக உரிம சேவைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும், இனி இந்த சேவைகளுக்கு அமைச்சகத்தின் வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், அமைச்சகம் சமீபத்தில் தனது இணையதளத்தில் இரண்டு புதிய ஆன்லைன் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய சேவைகளில், உறவினர்களின் இருப்பிடத்தில் இருப்பவர்களுக்கு பணி அனுமதி (பணி அட்டை) கோருதல் மற்றும்  தொழிலை மாற்றுதல் போன்றவை அடங்கும் என்றும், மேலும் இதன் மூலம் புதிய பணி அனுமதி வழங்க அல்லது புதுப்பிக்க மற்றும் காணமால் போனதை ரத்துசெய்து புதிய ஒன்றை பெற விரும்பும் குடியிருப்பாளர்களுக்கு பயனளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் எதிர்வரும் நாட்களில் வானிலை லேசான தூசி காற்றுடன் சூடாக இருக்கும்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar /

?Twitter
https://twitter.com/qatartms

?Instagram  https://www.instagram.com/qatartms/