கத்தாரில் உள்ள இந்தியர்களுக்கான காப்பீடு திட்டம் குறித்த 5ம் கட்ட சிறப்பு முகாம்.!

ICBF Life Insurance Scheme Qatar
Pic: FB/OTP

கத்தார் நாட்டில் உள்ள இந்தியர்களுக்காக சிறப்பு காப்பீடு திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திய தூதரகத்திற்க்கு கீழ் இயங்கும் Indian Community Benevolent Forum அறிமுகப்படுத்தியது.

இந்திய தூதர் மற்றும் ICBF நிர்வாகிகள், தமிழ் மக்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் இதில் இணையவும் மற்றும் பொதுநல அமைப்புகள் இதனை மக்களிடம் கொண்டு செல்லவும் கேட்டுக்கொண்டனர்.

கத்தாரில் உள்ள இலங்கை தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு.!

இதையடுத்து, கத்தார் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை இதற்காக குழு தயாரித்து தற்போது வரை ஐந்து கட்ட முகாம் நடத்தி பல்வேறு தமிழ் மக்களை இந்த காப்பீட்டு திட்டத்தில் இணைத்து வருகிறார்கள்.

இந்த முகாம்கள், முதல் கட்டமாக சானையா 40 பகுதியிலும், இரண்டாம் கட்டமாக அல் கோர் செட்டிநாடு உணவகத்திலும், மூன்றாம் கட்ட முகாம் சானையா 15 பகுதியிலும், நான்காம் கட்டமாக சானையா 40 அரேபியன் MEP காண்ட்ராக்ட்டிங் கம்பெனி கேம்ப்பிலும், ஐந்தாம் கட்டமாக அல் கோர் பகுதியிலும் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஐந்தாம் கட்டமாக நடைபெற்ற முகாமில், மீனவ சகோதரர்கள் மற்றும் நஜ்மா பகுதிகளில் உள்ள சகோதரர்கள் இணைந்துள்ளனர்.

கத்தாரில் முகக்கவசம் அணியாத 164 பேர் மீது நடவடிக்கை.!

இந்த காப்பீட்டு திட்டத்தில், விடுபட்டவர்கள் அனைவரும் இணைந்து பயனடையுமாறு கத்தார் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…