கத்தாரில் உள்ளூரில் விளையும் காய்கறிகள் விற்பனை அதிகரிப்பு.!

Locally produced vegetables
Pic: MME

கத்தாரில் கடந்த நவம்பர் மாதம் பிரீமியம் தயாரிப்பு திட்டத்தின் மூலம் சுமார் 481 டன் மற்றும் கத்தார் பண்ணை திட்டத்தின் மூலம் சுமார் 1,206 டன் உட்பட மொத்தமாக 1,687 டன் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகள் முழுவதும் விற்பனையாகியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் விற்பனை செய்யப்பட்ட 351 டன் காய்கறிகளுடன் ஒப்பிடும்போது, பிரீமியம் தயாரிப்புகள் திட்டம் நவம்பர் மாதம் 37 சதவீதம் அதிகரித்துள்ளது.

கத்தார் தேசிய தினம்: அமீருக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்.!

அதேபோல், கத்தார் பண்ணைகள் திட்ட தயாரிப்புகளின் விற்பனை 809 டன்னிலிருந்து 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும், பண்ணை உரிமையாளர்களுக்கு ஆதரவு மற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான பல்வேறு சந்தைப்படுத்தல் திட்டங்கள் வழங்கப்படுவதால், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளின் அளவு கடந்த பருவங்களுடன் ஒப்பிடும்போது கணிசமாக அதிகரித்துள்ளது.

கத்தாரிலிருந்து நாடு திரும்பும் குடியிருப்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…