கத்தார் தொழில்துறை பகுதியில், தற்காலிக கடைகளை Lulu திறந்துள்ளது.!

கத்தார் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் (MOCI), உள்துறை அமைச்சகம் (MOI), மற்றும் நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன், Lulu ஹைப்பர் மார்க்கெட் தொழில்துறை பகுதியில், பல்வேறு இடங்களில் தற்காலிக சூப்பர் மார்க்கெட்டுகளை திறந்துள்ளது.

இந்த மினி பல்பொருள் அங்காடியானது, அனைத்து அத்தியாவசிய மற்றும் மலிவு தயாரிப்புகள், மளிகை பொருட்கள், புதிய உணவு (Fresh food), உடனடி உணவு (Instand food), சுட்ட உணவு (baked food) மற்றும் பிற அன்றாட தேவைகளை வழங்கும் என தெரிவித்துள்ளது.

Lulu ஹைப்பர் மார்க்கெட்டுகளின் இயக்குநர் டாக்டர் முஹம்மது அல்தாஃப் கூறியதாவது :

சமூகத்திற்கு அத்தியாவசியமான பொருட்களை வழங்குவதை உறுதி செய்வதன் மூலம் நெருக்கடியை எதிர்கொள்ள அவர்கள் உருவாக்கிய தற்செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக மாற அனுமதித்த அரசாங்க அதிகாரிகளுக்கு நாங்கள் மிகவும் நன்றி கூறுகிறோம். தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலையில், தற்காலிக சூப்பர் மார்க்கெட்டுகள் மூலம் சமூகத்திற்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது இந்த முயற்சி எனக் கூறியுள்ளார்.

மேலும், வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், Lulu கடைகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக நிர்வாகம் கூறியுள்ளது. Lulu Department கடைகள் இப்போது காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்திருக்கும் என்றும், Lulu சூப்பர் மார்க்கெட்டுகள் வழக்கம் போல் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 வரை திறந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.