கத்தாரில் வாகனத்தில் சாகசம்‌ செய்த நபர் கைது..!

Man arrested for reckless driving on Qatar roads. Image Source : Ilq

கத்தார் அல் சைலியா ரவுண்டானா‌ பகுதியில்‌, கார் ஒன்றை இரு சக்கரங்களினால்‌ ஓட்டி சாகசம் செய்த நபரை போக்குவரத்து துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

அந்த நபர், இரண்டு சக்கரங்களால் காரை ஓட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாகன சாகசத்தில் ஈடுபட்ட அந்த நபரின் கார் மேலதிக அறிவிப்பு வரும் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், சாலையில் ஏற்பட்ட சேதத்திற்கு ஈடுசெய்யவும் வாகன ஓட்டிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

Source : Gulf Times

Road stunt in Qatar

WATCH: Driver held, SUV seized for dangerous sidewall skiing on Qatar roadREAD: https://qatar-tribune.net/39Qe47a

Posted by Qatar Tribune on Thursday, April 9, 2020