கத்தாரில் இன்று பிற்பகல் ‌இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வுத்துறை எச்சரிக்கை.!

Met warns of rain and thunder this afternoon in Qatar
Pic: Qatar Weather

கத்தாரில் இன்று (30-09-2020) புதன்கிழமை மாலை 6 மணி வரை வானிலையானது கடலோரப் பகுதிகளில் மங்கலாக இருக்கும் என்று கத்தார் வானிலை ஆய்வுத்துறை (QMD) தெரிவித்துள்ளது.

இன்று வானிலையானது, பகல் நேரத்தில் சூடாக இருக்கும் என்றும், பிற்பகலுக்குள், இடி மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

இதையும் படிங்க: குவைத் அமீர் மறைவு: கத்தாரில் கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது.!

கத்தார் வடக்கில் Abu Thaloof பகுதியில் வானம் மேகமூட்டமாக இருக்கும் புகைப்படத்தை கத்தார் வானிலை ஆய்வுத்துறை ட்வீட் செய்துள்ளது.

மேலும், சில நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் வடக்கில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளது. சில இடங்களில் வலுவான காற்று வீசக்கூடும் என QMD எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: குவைத் அமீரின் மறைவுக்கு கத்தாரில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் – கத்தார் அமீர் அறிவிப்பு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…